எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்திற்காக என்ற தகவலை பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்
எஸ்பிபி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டி.இமான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் எஸ்பிபி அவர்களுடன் தளபதி விஜய் யின் “ஜில்லா” படத்தில் தான் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருப்பதாகவும் அந்த படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் அவர் ஒரு பாடலை பாடி இருப்பதாகவும், வழக்கம் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்றோ சாங் எனப்படும் ஆரம்ப பாடலை அவர் தான் பாடி உள்ளதாகவும் டி இமான் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்காக எஸ்பிபி அவர்கள் பாடிய கடைசி பாடலை கம்போஸ் செய்ததை நினைத்து பார்க்கும்போது தான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக கருதுவதாகவும் டி இமான் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.