மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி சுப்ரமணியம் உடலுக்கு தளபதி விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி எஸ்பிபி மரணம். கடந்த 51 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி உடல்நல குறைவால் நேற்று காலமானார்.அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்பிபி மகன் சரணுக்கு ஆறுதல் கூறிய விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார்.காதலுக்கு மரியாதை, லவ் டுடே , யூத், கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களில் எஸ்பிபி அவருக்காக பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும் பொழுது ரசிகர்களால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது கூட்டத்தில் தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டார். கீழே விழுந்த ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக்கொடுத்துள்ளார் தளபதி விஜய் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது .
கீழே விழுந்த ரசிகனின் காலணிகளை தன் கைகளால் எடுத்துக்கொடுத்த ஆகச்சிறந்த மனிதாபிமான மனிதர் அண்ணன் தளபதி @actorvijay
எவ்ளோ உயரத்துல இருந்தாலும் அந்த பணிவு தான் அவரின் நிஜ வெற்றிக்கான காரணம்!@actorvijay@Jagadishbliss@BussyAnand
Source 👉🏻 @ThanthiTV pic.twitter.com/nwACpPzS3A— V4UMEDIA (@V4umedia_) September 26, 2020