இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்.
நீண்ட காலமாக இசைஞானி இளையராஜா இசையில் பாடாமல் இருந்தார் எஸ்.பி.பி அவர்கள். வெகு நாட்களுக்கு பிறகு இளையராஜா இசையில் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், பெப்சி சிவா அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்தில் இடம்பெறும்
” நீதான் என் கனவு – மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் – மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்… திடமாய்…
எழுவாய் என் மகனே.
என்ற பாடல் தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.