V4UMEDIA
HomeNewsKollywoodSPB இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ !

SPB இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ !

இந்திய திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அனைவரையும் கவரும் இனிமையான குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து, அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று (செப்டம்பர் 25) நண்பகலில் காலமானார்.

அவரது மரணம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,
“கடைசி நிமிடம் வரை போராடி மரணத்தை தழுவிட்டார் எஸ்பிபி. அவருடைய குரலுக்கு ரசிகராக இல்லாதவர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. அவருக்கு உரிய மனித நேயர். அன்பான மனிதர். எத்தனையோ பாடகர்களை அறிமுகம் செய்துள்ளது. யாருக்கும் இல்லாத சிறப்பு அவருக்கு உள்ளது. அத்தனை மொழிகளிலும் பாடியுள்ளார். எனது குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலுடன் நினைவுகளும் எப்போதும் வாழும்.

இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அவரது குரல் இசையாய் ஒலிக்கும். அவரது குடும்பத்திற்கு எனந்து ஆழ்ந்த இரங்கல்….அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

#RIP Balu sir … you have been my voice for many years … your voice and your memories will live with me forever … I will truly miss you … pic.twitter.com/oeHgH6F6i4— Rajinikanth (@rajinikanth) September 25, 2020

Most Popular

Recent Comments