V4UMEDIA
HomeNewsKollywoodநான் நலமுடன் இருக்கிறேன் ! அறிக்கை வெளியிட்ட ராமராஜன் !

நான் நலமுடன் இருக்கிறேன் ! அறிக்கை வெளியிட்ட ராமராஜன் !

திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
” சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது. இதற்காக மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும் . சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Image

எனக்கு சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அனலபேசியிலும் . நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் . நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும் . பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும் , மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.”
 இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகரும் இயக்குனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமராஜன் தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments