V4UMEDIA
HomeNewsKollywoodஎஸ்பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு சீமான் இரங்கல் !

எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு சீமான் இரங்கல் !

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 42 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது. இதனிடையே பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அவர் மீண்டு வருவார், நாம் கேட்டு மகிழ்வோம்" - சீமான் அழைப்பு! | seeman  about spb health | nakkheeran

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூவும் குயில்போல, தாலாட்டும் தாய்போல நம்மை தம் நாவால் வசப்படுத்திய தேன்குரலாளர், தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரை ஆற்றிய பெருங்கலைஞர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களை போற்ற வேண்டியது நமது கடமை. அவரது இறுதிப்பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூவும் குயில்போல, தாலாட்டும் தாய்போல நம்மை தம் நாவால் வசப்படுத்திய தேன்குரலாளர்,
தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரை ஆற்றிய பெருங்கலைஞர் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களை போற்ற வேண்டியது நமது கடமை. அவரது இறுதிப்பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்பி வைப்பதே நமது பெருமை!@CMOTamilNadu pic.twitter.com/O3FeFyb5ne— சீமான் (@SeemanOfficial) September 25, 2020

Most Popular

Recent Comments