மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி சுப்ரமணியம் உடலுக்கு தளபதி விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள செய்தி எஸ்பிபி மரணம். கடந்த 51 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி உடல்நல குறைவால் நேற்று காலமானார்.அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனிடையே பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் எஸ்பிபி மகன் சரணுக்கு ஆறுதல் கூறிய விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார்.காதலுக்கு மரியாதை, லவ் டுடே , யூத், கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட விஜய் நடித்த பல படங்களில் எஸ்பிபி அவருக்காக பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிபி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.