V4UMEDIA
HomeNewsKollywood“இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி” :...

“இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி” : நடிகர் சிவக்குமார் இரங்கல்!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டு இருப்பது ,

சீக்கிரமாகக் குணமடைந்து வெளியே வா பாலு: சிவகுமார் | sivakumar video about  spb - hindutamil.in

“அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி ” என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments