V4UMEDIA
HomeNewsKollywoodதெலுங்கில் 'தாதா 87' படத்தை ரீமேக் செய்யும் இயக்குனர் விஜய் ஸ்ரீ !

தெலுங்கில் ‘தாதா 87’ படத்தை ரீமேக் செய்யும் இயக்குனர் விஜய் ஸ்ரீ !

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் “தாதா 87”. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீயே கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி இருந்தார். 90 வயதிலும் லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சாருஹாசன்.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. “விரைவில் #தாதா87 படத்தை தெலுங்கில் இயக்குகிறேன்திருநங்கை என்று தெரியாமல் காதலித்த நாயகனை ஏற்றுக்க கொண்டாளா என்பதை தமிழில் ஆதரித்தது போல் தெலுங்கிலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கையுடன்  விரைவில் திரையில்” என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) , சாருஹாசன் நடிப்பில் ஒரு படம் , அம்சாவர்தன் நடிப்பில் ஒரு படம் , தடம் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வித்யா பிரதாப் முன்னணி நடிகையாக நடிக்கும் ஒரு புதிய படம் என பிஸியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments