V4UMEDIA
HomeNewsMollywoodமோகன்லால், மீனா நடிக்கும் 'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பு தொடங்கியது

மோகன்லால், மீனா நடிக்கும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

மேலும் பல இந்திய மொழிகளில் போட்டி போட்டு ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல் ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் பாபநாசம் பெயரில் வெளியானது. தமிழ் ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

தற்போது மலையாளத்தில் நேற்று (செப்டம்பர் 21) முதல் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மீண்டும் அதே குழு இந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர். மோகன்லால் & மீனா நடிக்கும் இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார்.

Most Popular

Recent Comments