V4UMEDIA
HomeNewsKollywoodதிரையரங்குகளில் தான் 'மாஸ்டர்' ரிலீஸ் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி !

திரையரங்குகளில் தான் ‘மாஸ்டர்’ ரிலீஸ் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.

Master: Is THIS When Thalapathy Vijay & Vijay Sethupathi's Action Thriller  Will Release?

‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் வெளியாகி வந்தன. அவ்வப்போது படக்குழுவினரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 23) கோவை எஸ்.ஆர்.புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படம் திரையரங்குரளில் தான் வெளியாகும். வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments