நடிகர் சூர்யாவை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் .
நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு அறிக்கையை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார்.இதற்கு இந்து முன்னணி தொண்டர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவையில் சூர்யாவின் உருவப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த சூழலில் கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நடிகர் சூர்யாவை கண்டித்து கோவையில் இந்து இளைஞர் முன்னணி போராட்டம்
சூர்யாவின் உருவப் படத்தை கிழித்து காலில் மிதித்து இந்து இளைஞர் முன்னணி போராட்டம்#Suriya #HinduMunnani #Protest #இந்துஇளைஞர்முன்னணி #Coimbatore pic.twitter.com/cuC9W3NeBf— Oneindia Tamil (@thatsTamil) September 20, 2020
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா, சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சால் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் கோவை மற்றும் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூர்யாவிற்கு அவமதிப்பு செய்யும் வகையில் அவரது உருவப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.