V4UMEDIA
HomeNewsKollywood4 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளுக்காக கால்வாயை சீரமைத்த நடிகர் கார்த்தி !

4 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிகளுக்காக கால்வாயை சீரமைத்த நடிகர் கார்த்தி !

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படும் வகையில் கால்வாய் ஒன்றை நடிகர் கார்த்தி தனது சொந்த செலவில் ரூ.4லட்சம் செலவில் சீரமைத்து கொடுத்துள்ளார்.

இயக்குனர் பாண்டியராஜின் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் விவசாயியாக நடித்த நடிகர் கார்த்தி, திரைப்படங்களில் நடிப்பதுடன் மட்டுமின்றி தொடர்ந்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். விவசாயிகளின் நலனுக்காக அவர் உழவன் என்ற அறக்கட்டளையை தொடங்கி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தி தனது உழவன் அறக்கட்டளையின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் தாலுகாவில் 13 கி.மீ நீளமுள்ள சூரவலி கால்வாயை சரி செய்து கொடுத்துள்ளார்.

இதற்கான பணியை ஆம்பினோல் ஆம்னி கனெக்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்களிப்புடன் மேற்கொண்ட அவர் 21 நாட்களில் ரூ. 4 லட்சம் செலவில் இதற்கான பணிகளை விரைந்து முடித்துள்ளார்.

இந்த மறுசீரமைப்பு பணியினால் அருகிலுள்ள எட்டு ஏரிகளுக்கு நீர் வழங்கப்படும் என்றும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் சுற்றியுள்ள பத்து கிராமங்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Actor @Karthi_Offl ‘s #UzhavanFoundation has repaired a 13 km long Sooravali canal in the Radhapuram taluk of Tirunelveli district. This work was carried out with the contribution of Amphenol Omni Connect India Pvt. Ltd. at a cost of about Rs 4 lakh over the last 21 days.. pic.twitter.com/gH9nWAMLOr— Ramesh Bala (@rameshlaus) September 18, 2020

Most Popular

Recent Comments