மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசாத்தில் மாபெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த 13வது 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
அதனை தொடர்ந்து, முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் சௌரப் திவாரி 42 ரன்களை எடுத்தார்.
அதன் பின், சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் இல்லை என்று பல தரப்பினர் எள்ளி நகையாடியபோதும் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த வெற்றி தோனி கேப்டனாக இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 100வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என்று அனைவரும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சிஎஸ்கே வெற்றியை தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார். அதில் “நாங்க எங்கயும் போகல டா!! இங்கதான் இருக்கோம்!! இங்கதான் இருப்போம்!! டீல் வித் இட்!” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதே போல பல பிரபலங்களும் சென்னை அணியின் வெற்றியைத் தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
