கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். ஆனால், ஷாலு ஷம்முவோ தனது ரசிகர்கள் இருவரது பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கும் ஷாலு ஷம்மு, அவ்வபோது தனது ரசிகர்களிடம் பேசுவது உண்டு. அப்படி பேசும் போது இரண்டு ரசிகர்கள் தங்களது பிறந்தநாளுக்காக அவரை வாழ்த்த சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்து கூறிய ஷாலு ஷம்மு, அவர்கள் பற்றி கேட்கும் போது, அவர்கள் அவருடைய வீட்டின் அருகே வசிப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து, கேக் வெட்டி அவர்களின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த இரண்டு ரசிகர்களும் உற்சாகமாக ஷாலு ஷம்முவுடன் தங்களது பிறந்தநாளை கொண்டாடியதோடு, இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷம்முவை பாராட்டி வருகிறார்கள்.