V4UMEDIA
HomeNewsKollywoodமாதவனின் ரீமேக் படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா ??

மாதவனின் ரீமேக் படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா ??

மாதவன் மற்றும் ஸ்ராத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்துள்ள படம் “மாறா” . இவர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா மாபெரும் வெற்றி பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாறா திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Image

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் லாக்டவுன் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல படங்கள் ஓடிடியில் ரீலிஸாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இந்நிலையில் மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா என்ற படமும் தயாராக உள்ளதால் ஓடிடியில் ரிலிஸ் செய்ய முன்னணி தளமான அமேசான் ப்ரைமிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படம் 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சார்லி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் பார்வதி இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments