V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய் யின் "வேட்டைக்காரன்" பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழந்தார் !

தளபதி விஜய் யின் “வேட்டைக்காரன்” பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழந்தார் !

நடிகர் விஜய் இளைய தளபதி யாக கடந்த 2009ல் வெளியான படம் வேட்டைக்காரன். விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த இப்படத்தை பாபு சிவன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. சுமாரான திரைக்கதை தான் என்றாலும் விஜய் என்றே ஒருவருக்காகவே பட்டி தொட்டி எல்லாம் பெரிய ஹிட்டானது. வேட்டைக்காரன் படத்திற்கு பின் “குருவி” படத்தில் வசனம் எழுதினார். பின்னர் சண்டக்கோழி-2 படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்தார்.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் இயக்குனர் பாபு சிவன் (54 வயது) உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைபாட்டினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலேயே மரணித்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது இறப்பிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையை சேர்ந்த சக கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் என பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments