இயக்குனர் பி.அமுதவாணன் ‘ஃகோட்டா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சாதியை வைத்து வாய்ப்புகள் மறுக்கப்படும் வறிய குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு உலகிற்குக் காட்டுவதே படத்தின் கதை. இந்தப் படம் பிகுர்ஃப்ளிக் இண்டி திரைப்பட விழாவிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு பழங்குடி குக்கிராமத்திலிருக்கும் சிறுவன் ஜிம்னாஸ்டிக் கலைஞராக மாற ஆசைப்படுகிறார். ஆனால், அவனது பொருளாதார நிலை மற்றும் பின்னணி அவனது கனவுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. “பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் கனவுகளை அடைய எப்படி தொடர்ந்து போராடுகிறார்கள் என்பதே படத்தின் கதை.
தற்போது கோட்டா படத்தின் கோட்டா குட்டி கான்செப்ட் ட்ரைலரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நாளை (செப்டம்பர் 17) மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். ஹர்பஜன் பிரண்ட்ஷிப் என்ற படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.