பிரபல தமிழ் நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான ப்ளோரன்ட் பெரேரா இன்று காலமானார்.
மூத்த பத்திரிகையாளருமான ப்ளோரன்ட் பெரேரா தமிழில் பல தரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். என்கிட்ட மோதாதே , வேலையில்லா பட்டதாரி 2, கயல், தர்மதுரை, ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெரேரா கடந்த மாதம் தான் பாஜக-வில் இணைந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ளோரன்ட் பெரேரா இன்று உடல்நல குறைவால் காலமானார்.
இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகத்துறையினரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.