மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். பிரபல கேரள நடிகர் திலீப்பை திருமணம் செய்தபின் நடிப்பில் ஈடுபடாமல் இருந்த மஞ்சு வாரியர் பின்பு அவருடன் விவாகரத்து பெற்ற பின்னர், சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
15 வருடங்களுக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படம்தான் தமிழில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்று ரீமேக் செய்யப்பட்டது.
மஞ்சு வாரியர் கடந்த வருடம் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான “அசுரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அசுரன் படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி இருந்தார். தமிழில் ஒரு படத்திலே தமிழ் ரசிகர்கள் அனைவரையும் தன் நடிப்பால் வென்றார்.
தற்போது மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கத்தில் “வெள்ளரிக்கா பட்டணம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் சோபின் ஷாஹிர் நடிக்கிறார். இந்தப் படத்தின் போஸ்ட்டரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.