V4UMEDIA
HomeNewsKollywoodதொழிலபதிரை கரம் பிடித்த மியா ஜார்ஜ் ! வைரலாகும் புகைப்படங்கள் !

தொழிலபதிரை கரம் பிடித்த மியா ஜார்ஜ் ! வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழில் அமரா காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை என பல ஹிட் படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் இருக்கிறார். மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெறுள்ளார்.

தற்போது சியான் விக்ரம் நடிப்பில், லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கி வரும் “கோப்ரா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் மலையாளத்திலும் “கண்மணிலா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Image

கொரோனா லாக்டவுன் என்பதால் சற்று தாமதாக திருமண வேலைகள் நடந்த வந்த நிலையில், நேற்று எளிய முறையில் கொச்சியில் உள்ள செயின்ட் மேரி கதீட்ரல் பசிலிக்கா சர்ச்சில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த அழகிய ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments