2002ம் ஆண்டு “நந்தனம்” என்ற மலையாள படத்தில் நடிகராக அறிமுகமானார். 2005ம் ஆண்டு கே.வி.ஆனந்த இயக்கிய “கனா கண்டேன்” படத்தில் வில்லனாக நடித்தாலும், இயக்குனர் பாக்கியராஜின் “பாரிஜாதம்” திரைப்படம் தான் இவரை தமிழில் பெரிதாக அடையாளப்படுத்தியது. அதன் பின் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உறுமி போன்று பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த வருட தொடக்கத்தில் வெறும் ஆறு கொடி ரூபாய் செலவில் உருவாகி வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஐம்பது கோடிக்கும் மேல் வசூல் சாதனையை எட்டியது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற கடும் போட்டி நடந்தது அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக பிரித்திவிராஜ் நடிப்பில் “ஆடுஜீவிவிதம்” படம் மலையாளத்தில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த “காவியத்தலைவன்” படம் தான் நடிகர் பிரித்திவிராஜ் தமிழில் நடித்த கடைசி படம். அதற்கு பிறகு சுமார் ஆறு ஆண்டுகளாக இவர் தமிழில் எந்த படங்களும் நடிக்கவில்லை. இப்போது மீண்டும் ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க பல கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.