V4UMEDIA
HomeNewsBollywoodவிசாரணையில் போட்டு உடைத்த ரியா ! போலீஸ் வளையத்துக்குள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி...

விசாரணையில் போட்டு உடைத்த ரியா ! போலீஸ் வளையத்துக்குள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் !

நடிகர் சுஷாந்தின் மரணம் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சுஷாந்த் மரணம் குறித்த சர்ச்சை பாலிவுட்டில் மிகப்பெரிய வடிவில் உருவெடுத்துள்ளது. சுஷாந்த் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. ரியாவின் டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்-அப் மெசேஜ்களில் இருந்து போதைப்பொருள் பற்றிய விவகாரம் தெரிய வந்தவுடன் வழக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு டீம் தனது விசாரணையை சமீபத்தில் தொடங்கியவுடன், ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி, சுஷாந்தின் வீட்டு மேலாளர் தீபேஷ் சாவந்த் மற்றும் சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கு குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சாரா அலி கான், பிரபல நடிகை ரகுல் ப்ரீத், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா, சுஷாந்தின் நண்பரும் முன்னாள் மேலாளருமான ரோகிணி ஐயர் மற்றும் கேஸ்டிங் டைரக்டர் முகேஷ் சாப்ரா ஆகியோரும் இந்த போதைப்பொருள் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக ரியா சக்ரபோர்த்தி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

2018 ல் ‘கேதார்நாத்’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக சாரா அலி கான் அறிமுகமானார். அப்போது இருவரும் காதலித்ததாகக் கூறப்பட்டது. முன்னதாக என்.சி.பி விசாரித்தபோது, போதைபொருள் கொள்முதல் செய்யும் பெரும் பாலிவுட் பிரபலங்களின் சில பெயர்களை ரியா வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் பல முக்கிய பிரபலங்களின் பெயர்களும் அடிபடும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Most Popular

Recent Comments