தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், அரசியல்வாதியுமான நடிகர் சிரஞ்சீவி சில ஆண்டுகளுக்கு முன் “பிரஜா ராஜ்ஜியம்” என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
ஆனால் அவரால் அரசியலில் எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை. இதனால் தனது நண்பர்களான கமல் மற்றும் ரஜினிக்கு அவர் அட்வைஸ் செய்தார்.
தனது அரசியல் எண்ணம் பொய்த்துப் போனாலும் அவரது தம்பி பவன் கல்யாண் அரசியலிலும் சினிமாவிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆனாலும் கடந்த தேர்தலில் பவன் கல்யாண் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்று போனார்.
இந்நிலையில் இளம் நடிகர்களுக்கு சவால் விடுக்கும் வகையில், நடிகர் சிரஞ்சீவி புதுவித கெட்டப்பில் இளம் இயக்குநர்களில் படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் மிக வைரலாகி வருகிறது. இதில் அவர் மொட்டையடித்து, கண்ணில் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஸ்டைலாகக் காட்சியளிக்கிறார். இப்படத்திற்குக் கீழ் நான் பார்ப்பதற்குத் துறவி போல் தெரிகின்றேனா ? என கேட்டுள்ளார்.