பாலிவுட் திரையுலகின் டாப் ஸ்டார்களில் ஒருவர் அக்ஷய்குமார். சமீபத்தில் உலக அளவில் பிரபலமான டிவி நிகழ்ச்சியான பியர் கிரில்ஸ்-ன் இன் டு த வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் யானை சாண டீ குடித்தார்.
அந்த நிகழ்ச்சி பற்றிய அனுபவங்களை பியர் கிரில்ஸ், பாலிவுட்
நடிகை ஹுமா குரேஷி ஆகியோருடன் வீடியோ சாட்டிங்கில் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை ஹுமா, யானை சாண டீயை எப்படி குடித்தீர்கள் என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அக்ஷய், “அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆயுர்வேத காரணத்திற்காக நான் தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன். அதனால் எனக்கு அந்த டீயைக் குடிப்பதில் நெருடல் இல்லை” என பதிலளித்தார்.
பியர் கிரில்ஸ், அக்ஷய்குமார் கலந்து கொண்டுள்ள இன் டு த வைல்ட் நிகழ்ச்சி செப்டம்பர் 14ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.