V4UMEDIA
HomeNewsKollywoodகொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் எஸ்.பி.பி : ரசிகர்கள் பிரார்த்தனைக்கு கிடைத்த பலன்

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் எஸ்.பி.பி : ரசிகர்கள் பிரார்த்தனைக்கு கிடைத்த பலன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளார் என்ற நல்ல செய்தி வந்துள்ளது.

பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரின் உடல் நிலை முன்னேற்றம் அடைவதில்லை என மருத்துவர்களும் தகவல் அளித்தனர். இருப்பினும் அவருக்கு செயற்கை ஸ்வாச உதவியுடன் அதி நவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டது.

இந்த சூழலில் திரையுலக பிரபலங்களும், எஸ்.பி.பி ரசிகர்களும் அவருக்காக கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.

அவரின் மகன் எஸ்.பி சரண் திங்கள் அன்று நல்ல செய்தி வரும் எனவும் சொல்லி இருந்தார். இந்த சூழலில், அனைவரின் வேண்டுதல்கள் படி எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து விட்டதாக அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார். இந்த செய்தி திரையுலக பிரபலங்கள் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாகியுள்ளது ..

Most Popular

Recent Comments