தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவின் பிறந்த்நாள் இன்று ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் “என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலு, கவுண்டமணி – செந்தில் என்ற ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவை ஆளும் காலத்தில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து தமிழக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து காமெடி ராஜாவாக முடி சூட்டிக்கொண்டார். அதன் பின் அவர் இல்லாத நாள் தமிழர்களுக்கு இல்லை. அவர் வசனங்களை பேசாத தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
அரசியல் காரணங்களால் சினிமாவில் முழுமையாக நடித்து 10 ஆண்டுகள் ஆனபோதும் சோசியல் மீடியாவே அவர் வசனங்களை சொல்லியும் மீம்ஸ்களைப் பகிர்ந்தும்தான் இயங்கி வருகிறது. இன்று 60 ஆவது பிறந்தநாள் காணும் அவர் மிக சீக்கிரமே திரையில் வந்து மீண்டும் தன் இம்சை ராஜ்ஜியத்தைத் தொடங்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் தீர ஆசை.