V4UMEDIA
HomeNewsKollywoodவிரைவில் வருகிறது ஜென்டில்மேன் 2 - அறிவித்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் !

விரைவில் வருகிறது ஜென்டில்மேன் 2 – அறிவித்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் !

1993ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் மாபெரும் ஹிட் அடித்த “ஜெண்டில்மேன்” படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். நம்பியார், மனோரமா, மதுபாலா, வினீத், சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி என பலர் நடித்து வெளியான இப்படம் அப்போதைய காலத்திலேயே மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது.

ஜெண்டில்மேன் படத்தின் மாபெரும் வெற்றி க்கு பின் தமிழில் காதலன், ரட்சகன், காதல் தேசம் என பல பிரம்மாண்ட படங்களை தயாரித்தார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இது மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை மலையாளம் மற்றும் வட இந்தியாவில் தமிழ் படங்களை விநியோகம் செய்தார். இந்நிலையில் தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Image

தனது ‘ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார். அவர் இதுகுறித்து ட்விட்டரில் சர்ப்ரைஸாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் இதில் நடிகர்கள், இயக்குனர் யார் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Most Popular

Recent Comments