தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படபிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்துள்ளார். மேலும் அவர் முகக்கவசமும் அணிந்திருக்கிறார்.
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் படபிடிப்புக்காக ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோ வந்திருக்கிறார். இது ஒரு விளம்பர படப்பிடிப்பு என்றும், படப்பிடிப்பு இன்றும் நாளையும் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.