V4UMEDIA
HomeNewsநடிகர் "அகில் அக்கினேனி"யின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது !!

நடிகர் “அகில் அக்கினேனி”யின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது !!

தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் அகில் அக்கினேனி. இவர் அக்கினேனி நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனி ஆகியோரின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் நாகேஸ்வர ராவின் பேரனும் ஆவார்.

தற்போது இயக்குநர் சுரேந்திர ரெட்டி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் மற்ற நடிகர்கள் பற்றியும் குழு விவரங்கள் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தை ஏ.கே எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இயக்குநர் சுரேந்திர ரெட்டியின் இயக்கத்தில் தொடங்க இருக்கும் இத்திரைப்படம் தனக்கு விசேஷமானது என்றும் இதன் படப்பிடிப்பு தொடங்குவதை எண்ணி ஆவலாக காத்திருப்பதாகவும், இளம் நடிகர் அகில் அக்கினேனி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கில் அக்கினேனி, 1995ம் ஆண்டு வெளிவந்த சிசிந்தரி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.2015ம் ஆண்டு வி. வி. வினாயக் இயக்கத்தில் வெளிவந்த”அகில்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இயக்குநர் சுரேந்திர ரெட்டி அத்தநோக்கட என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். மேலும் இவர் அசோக், அதிதி, கிக், கிக்2, ஊசரவல்லி, திருவா, செ.ரா.நரசிம்மரெட்டி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.சுரேந்திர ரெட்டி மற்றும் அகில் அக்கினேனி ஆகியோரின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

Recent Comments