கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29-ஆம் தேதி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் ஜூன் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து யோகி பாபு நடித்த “காக்டெய்ல்” , சூர்யா நடித்த “சூரரை போற்று” போன்ற படங்கள் வந்தன. இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ என 2 படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன். இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஒரு பக்க கதை’ ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகளாகியும் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் உள்ளது.
இந்த நிலையில் இப்படம் செப்டம்பர் 25ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது