தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இன்று ( செப்டம்பர் 10 ) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். படத்துக்கு படம் வித்தியாசமாக நடிப்பது மட்டுமின்றி படத்துக்கு படம் வசூல் வாரி சாதனை படைத்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “கோமாளி” திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 42கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. ஜெயம் ரவியின் படங்கள் வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டு வருவதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மிக முக்கியமான காரணம் என சொல்லப்படுவதுண்டு.
இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள படம் “பூமி” . இப்படத்தை இயக்குநர் லட்சுமணன் இயக்கியுள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் என 2 ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் ஒரு பாட்டிற்கு அனிருத்தை பாட வைத்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு பூமி படத்தில் அனிருத் பாடிய முதல் பாடல் ரிலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்பாடலை எழுதியுள்ளார்.