கோமாளி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் லக்ஷ்மணன் இயக்கும் ‘பூமி’ படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ரோமியோ ஜூலியட், போகன் என இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படம் ஜெயம் ரவிக்கு 25வது படமாகும்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து வருகிறார். அடங்கமறு வெற்றிக்கு பின் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ளார்.
பூமி படத்தின் முதல் சிங்கிளாக ” தமிழன் என்று சொல்லுடா” பாடல் வரும் செப்டம்பர் 10 அன்று ஜெயம் ரவியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று தொடங்கும் இந்த பாடலை பாடியது அனிருத் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே டி இமான் இசையில் ஒரு சில பாடல்களைப் பாடியுள்ள அனிருத், தற்போது ஜெயம் ரவிக்காக மீண்டும் ஒருமுறை டி இமான் அவர்களுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.