V4UMEDIA
HomeNewsMollywoodஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் "அர்ச்சனா 31 நாட் அவுட்" !

ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கும் “அர்ச்சனா 31 நாட் அவுட்” !

2017ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மாயநதி” திரைப்படம் மூலம் கடந்த இரண்டு வருடங்களுக்குள் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. பல விருதுகளை வென்று இருக்கிறார்.

இவர் நடித்த முதல் படமான மாயனதிக்கு மட்டும் “Asianet Film Awards” என ஐந்து விருதுகளை வென்று தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் விஷால் நடித்த “ஆக்சன்” படத்தில் அறிமுகமானார், தற்போது கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் தனுஷ் ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்தனம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் பூங்குழலியாக நடிக்கவிருக்கிறார்.இதற்காக இவர் படகு ஓட்ட கற்றுக் கொண்டு வருகிறார் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவர் ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ என்கிற புதிய படத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளான்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Image

சமையல் பாத்திரங்களின் மேல் கால் வைத்தபடி, கையில் கரண்டியுடன், ஸ்டைலான லுக்கில் ஐஸ்வர்ய லட்சுமி நிற்கும் இந்த புகைப்படமே சம்திங் ஸ்பெஷல் என சொல்கிறது. அறிமுக இயக்குனர் அகில் அனில்குமார் என்பவர் இயக்கும், இப்படத்தை துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’ படத்தை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தயாரிக்கிறார்.

Most Popular

Recent Comments