2013ம் ஆண்டு வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இத்திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது, சென்னையில் பிரேமம் திரைப்படம் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு மேல் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மூலம் சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர். இந்த நிலையில் தற்போது பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில்,
” பாட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இந்த படம் ஒரு இசை சம்பந்தமான படம் என்றும் அல்போன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அவரே இசையமைக்க உள்ளார் ” என்பது குறிப்பிடத்தக்கது.
















