தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். டுவிட்டர் பக்கத்தில் இருந்தாலும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது தவிர வெறும் எதிலும் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அவர் ஒரு ட்வீட் போட்டால் போதும் அன்றைய ட்ரெண்டிங் அவர் தான். ட்வீட் செய்த ஒரு சில மணி நேரங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஒரு டுவிட்டை நேற்று இரவு பதிவு செய்தார். நேற்றிரவு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பதிவு செய்த டுவிட், ஒரு சில நிமிடங்களில் தமிழக அளவிலும், அதன் பின்னர் இந்திய அளவிலும் தற்போது உலக அளவிலும் அவரது டுவிட்டர் டிரெண்டில் ஆனது.
நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்குடன் ரஜினிகாந்த் பதிவு செய்த தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி ” என கூறியுள்ளார்.