நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது “குட்லக் சகி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குட்லக் சகி திரைப்படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இதனை ஆதி தனது டிவிட்டர் பக்கத்தில், கோலி ராஜூவை நான் நிச்சயம் பிரிந்திருக்கப் போகிறேன். இது போன்ற சிறப்பான குழுவில் பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆதி கோலி ராஜூ கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
சுதீர் சந்திர பத்ரி மற்றும் ஷ்ரவ்யா வர்மா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆதியும், கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குகிறார் நாகேஷ் குகுனூர்.
பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குகுனூர் தெலுங்கு மொழியில் முதன் முதலில் இயக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழிலும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.















