Home News Kollywood 7வது ஆண்டில் வெற்றிகரமாக கால் பதிக்கும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” !

7வது ஆண்டில் வெற்றிகரமாக கால் பதிக்கும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” !

சிவகார்த்திகேயன், ஶ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இப்படத்தை பொன்ராம் இயக்கியிருந்தார். மதனின் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழகத்தில் மட்டுமே 30கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Varuthapadatha Valibar Sangam”… Jest cause | Baradwaj Rangan

இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாகி இன்றுடன் 7 வருடங்கள் ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில் அருண் ராஜா காமராஜா மற்றும் கவின் இணைந்து காமன் டிபி ஒன்றை தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அருண் ராஜா காமராஜ் – ” வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம். பலருக்கும் இன்று வரை பிடித்த படம். நகைச்சுவை, காதல், பாடல்கள், வசனங்கள் கலந்த எண்டர்டெய்ன்மென்ட் நிறைந்த படத்தின் 7 ஆவது ஆண்டின் ஸ்பெஷல் காமன் டிபி என் நண்பன் சிவகார்த்திகேயன் உடன் ” என கூறியுள்ளார்.

Varuthapadatha Valibar Sangam streaming online

பிக் பாஸ் கவின் ” வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 7 வது ஆண்டு நிறைவு போஸ்டரை வெளியிடுவதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நான் முதல் நாள் முதல் ஷோ திரையரங்கில் குடும்பத்தினர் உடன் பார்த்த நினைவு. கோடம்பாக்கம் ஃபிளையோவர் அருகே இந்த மஞ்சள் சட்டையுடன் ஒரு போஸ்டரை நினைவில் இருக்கிறது. இது உங்களின் இலக்கு பற்றி இல்லை, அது எப்போதும் பயணம் பற்றித் தான்” & உங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் அந்தப் பயணம் ஒரு பெரிய மைல்கல் ஆகும்.” என்று கூறியுள்ளார்.