விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் “மெரினா” திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன்.
கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த கனா படத்தின் மூலமாகத் தயாரிப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ப்ளேக்சிப் யூடியூப் பிரபலங்கள் நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தைத் தயாரித்தார்.
ற்போது கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய எஸ்.கே.ப்ரொடெக்ஷன் மூலம் டாக்டர் படத்தைத் தயாரித்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
மேலும் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் ‘வாழ்’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் பிரதீப், பானு, திவா, யாத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது . ‘ஆஹா’ என்னும் இந்தப் பாடல் பிரதீப் குமார் இசையில் நாளை மறுநாள் சோனி மியூசிக் யூடியூப் பக்கத்தில் வெளியாக உள்ளது.