டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தற்போது நடிகை ராதிகா சரத்குமாரும் இணைந்துள்ளார்.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் டாப்ஸி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். தீபக் சுந்தர்ராஜன், தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தராஜனின் மகன் ஆவார்.
இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை டாப்ஸி ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜன கண மன’ படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தில் நடிகை ராடிகா சரத்குமார் இணைந்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ராஜஸ்தானில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை நடிகை ராதிகா ராஜஸ்தானில் ஒரு பழமை வாய்ந்த அரண்மனையின் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் டாப்ஸியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.






















