இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் என்றே சொல்லலாம். இவரது இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என அனைத்துமே வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றிய நான்கு படங்களுமே மெகா ஹிட்.
அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரம், இந்த இரண்டிற்காகவுமே அனைவராலும் பாராட்டப்படகூடிய இயக்குனராக வலம் வருகிறார். நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் நான்கு. கடைசியாக வெளியான அசுரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு பட்டி தொட்டி என மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது.
தற்போது வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. சூர்யாவை வைத்து வாடிவாசல், அதேசமயம் சூரியை வைத்து இன்னோரு படம், இதனை தொடர்ந்து தளபதி விஜய் யுடன் ஒரு படம் என வேற லெவல் வேகத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 04) தினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய வெற்றிமாறனுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் டுவிட்டர் பக்கத்தில் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது ரசிகர் ஒருவர், ” தனுஷ் – வெற்றிமாறன் படத்தை தயாரிக்கிறீர்களா ” என கேட்ட கேள்விக்கு, அவரும் “ஆமாம்” என தெரிவித்துள்ளார்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் என்பது உறுதியாகியுள்ளது.