டிவிட்டரில் சமூகப் பிரச்சனைகள், அரசியல், திரைப் பிரபலங்கள் என அனைத்து செய்திகளுமே ஹேஸ் டேக் மூலம் வைரலாகும். அந்த வகையில் நேற்று “ஹிந்தி தெரியாது போடா” என்ற ஹேஸ் டேக் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகின்றது.
இந்த திடீர் வைரலுக்கு இசையமைப்பாளர் யுவன் சஙகர் ராஜா, மெட்ரோ சதீஷ், சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தியுமே முக்கிய காரணம்.
நேற்று மெட்ரோ சதீஷ் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார். இதே போல சாந்தனு மற்றும் கீர்த்தியும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் மெட்ரோ சதிஷ், கீர்த்தி ஆகியோரின் சிவப்பு நிற டி சர்ட்டுகளில் “ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகமும், யுவன் மற்றும் சாந்தனுவின் வெள்ளை நிற டி சர்ட்டுகளில் “ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகமும் அச்சிடப்பட்டிருந்தது.
இதே போல இவர்கள் குழுவை சேர்ந்த சில நண்பர்களும் இதே வாசகங்கள் அடங்கிய டி சர்ட்டுகளை அணிந்திருந்தனர். ஏதாவது புது நிகழ்ச்சியா, திரைப்படமா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இதைப் பார்த்த அனைவருமே “ஹிந்தி தெரியாது போடா” என்ற ஹேஸ் டேகையும், “தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்” என்ற ஹேஸ் டேகையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த ஹேஸ் டேக் தற்போது இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.