கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பல படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் வித்யுத் ஜம்வால் நடித்த “குதா ஹாஃபிஸ்”. இந்த படம் ஆகஸ்ட் 14 ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.
ஃபாரூக் கபீர் இயக்கிய இப்படத்தில் வித்யூத் ஜம்வால் தவிர, சிவலீகா ஓபராய், அனு கபூர், சிவ் பண்டிட், அஹானா கும்ரா, விபின் சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடத்தப்பட்ட மனைவியை காப்பாற்றும் கணவனின் போராட்டம் தான் கதை. இந்தப் படம் உண்மையான நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டது.இந்நிலையில் வித்யூத் ஜம்வாலின் ரசிகர்களுக்கும், குதா ஹாஃபிஸ் படத்தை விரும்பியவர்களுக்கும் ஒரு அற்புதமான செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதுகுறித்து நடிகர் வித்யூத் ஜம்வால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “குதா ஹாஃபிஸ் படத்தின் அற்புதமான வெற்றிக்கு பின்னர், பனோரமா மூவிஸ் படத்தின் 2 ஆவது பாகமான ‘குதா ஹாஃபிஸ் அத்தியாயம் ll’ யை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.