விஷ்ணு விஷால் மற்றும் ரம்யா நம்பீசன் நடித்த “குள்ளநரி கூட்டம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஸ்ரீபாலாஜி.
வெண்ணிலா கபடி குழு மூலம் சினிமாவில் நுழைந்த விஷ்ணு விஷாலை வெற்றிக்கான அடுத்த லெவலுக்கு ஏறச் செய்த படம் குள்ளநரி கூட்டம்.
இப்படத்தில் அனைவரது நடிப்பும் மிகவும் எதார்த்தமாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி.
10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அடுத்த படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் ஸ்ரீபாலாஜி. இந்தப் படத்திற்கு ‘சூனா பானா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கேப்சர் மீடியா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
நிஜய் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அப்புகுட்டி, சாம்ஸ் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். செப்டம்பர் 1ம் தேதி திண்டுக்கலில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் சாம்ஸ், ஷூட்டிங்கின் முதல் நாளில் ஸ்பாட்டில் இருந்து சில படங்களை வெளியிட்டு “
ஆரம்பமானது சூட்டிங்… உற்சாகம் களைகட்டியது. “CAPTURE MEDIA CREATION காக திரு நந்த கோபால் அவர்கள் தயாரிக்க ” குள்ளநரி கூட்டம்” புகழ் திரு ஸ்ரீ பாலாஜி அவர்கள் இயக்கும் “சுநா பாநா” (Suna Pana). திண்டுக்கல்லில் பரபரப்பாக உருவாகி வருகிறது. தமிழக அரசிற்கு நன்றிகள் கோடி ” என டீவீட் செய்துள்ளார்.