V4UMEDIA
HomeNewsKollywoodமைக்கேல் மதன காமராஜன்' படத்தில் கமல் நடிப்பை பார்த்து பிரமித்த பிருத்விராஜ் !

மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமல் நடிப்பை பார்த்து பிரமித்த பிருத்விராஜ் !

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ். தமிழில் கனா கண்டேன்,மொழி, நினைத்தாலே இனிக்கும், சத்தம் போடாதே, ராவணன், காவியத் தலைவன் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்துள்ளார்.

பிருத்விராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பல மொழிகளிலும் போட்டி போட்டு கொண்டு ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், ப்ரித்விராஜ் தன் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். முக்கியமாக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.

உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. இந்தப் படத்தில் கமல்ஹாசனின் நான்கு வேடங்கள் சினிமா ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை. தற்போது பிருத்விராஜ் இந்தப் படத்தை மீண்டும் பார்த்துள்ளார்.

Image

“‘மைக்கேல் மதன காமராஜன்’ படம் மிக மிகச் சில படங்களே உங்களை மகிழ்விக்கும். கமல்ஹாசன் உலக சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். சகோதரி ஊர்வசி ஓர் ஆளுமை. இந்த ஆல் டைம் கிளாசிக் படத்தை மனைவியுடன் பின்னிரவில் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments