அரசியலில் கவனம் செலுத்த சினிமாவிலிருந்து விலகினார் நடிகர் பவன் கல்யாண். ஆனால் தான் எதிர்பார்த்த வெற்றி அரசியலில் கிடைக்காததால் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரிக்க ஸ்ரீராம் வேணு இயக்கியுள்ளார்.
‘வக்கீல் சாப்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று (செப்டம்பர் 02) பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
அதேபோல் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 27-வது படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்கி வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிகவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
இதனைப் பகிர்ந்து க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பதினைந்து நாட்களும் படப்பிடிப்புக் குழு அனைவருக்கும் அழகான நினைவுகளாக நகர்ந்துள்ளன. நிலையான வெற்றி கண் முன் தெரிகிறது. இதற்குக் காரணம் நீங்களே, உங்கள் ஊக்கமும், உங்கள் கனிவுமே. எப்போதும் இது போலவே கோடிக்கணக்கான மக்களின் வாழ்த்துகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என இயக்குநர் க்ரிஷ் தெரிவித்துள்ளார்.