V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய் அழைப்புக்காக வெயிட் பண்ணுறேன் - இயக்குனர் வெற்றிமாறன் !

தளபதி விஜய் அழைப்புக்காக வெயிட் பண்ணுறேன் – இயக்குனர் வெற்றிமாறன் !

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் என்றே சொல்லலாம். இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே மெகா ஹிட். அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரம், இந்த இரண்டிற்காகவுமே அனைவராலும் பாராட்டப்படகூடிய இயக்குனராக வலம் வருகிறார்.

நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய படங்கள் நான்கு. கடைசியாக வெளியான அசுரன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு பட்டி தொட்டி என மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை படைத்தது. தற்போது வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. சூர்யாவை வைத்து வாடிவாசல், அதேசமயம் சூரியை வைத்து இன்னோரு படம் என கூறப்படுகிறது.

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் நடிகர் விஜய்யை சந்தித்தாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் தளபதி 65 படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அது உறுதியாகவில்லை. வெற்றிமாறன் எப்போது தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பி கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் நிலவி வருகிறது.

வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில், எதிர்காலத்தில் விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேசியுள்ளார். “விஜய் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி விட்டேன். தளபதி விஜய் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும்” தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி மிக விரைவில் இணையும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Most Popular

Recent Comments