V4UMEDIA
HomeNewsபிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் ராவணன் ஆக நடிக்கும் சைப் அலிகான் !

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணன் ஆக நடிக்கும் சைப் அலிகான் !

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், தன்ஹாஜி – தி அன்சங்க் வாரியர் பட இயக்குநர் ஓம் ராவத், ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட 3டி படத்தில் இணைகின்றனர். இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்.

ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனரும் தன்ஹாஜி திரைப்படத்தின் இயக்குநருமான ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தை இயக்குவதற்கான அற்புதமான ஆக்‌ஷன் செட்களும், நிகரில்லாத கிராபிக்ஸ், எந்தவித தடைகளும் இல்லாத உயர்தர திட்டங்களையும் கொண்டுள்ளார். அவரது நோக்கத்தை திரையில் கொண்டுவருவதற்காக பூஷன் குமார் (டி சீரிஸ்) அவருடன் இணைகிறார். பாகுபலி திரைப்படத்தில் மெகா வெற்றிக்கு பிறகு இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகி வருகிறார்.

சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்களுக்கு பிறகு பூஷன் குமார் பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் ஆதிபுருஷ். இயக்குநர் ஓம் ராவத்துடன் இணையும் முதல் படம். இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கான இலக்கணத்தை நிச்சயம் உருவாக்கும்.

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கலாச்சாரத்தின் மிகப் பிரபலமான அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் மிகப்பெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் நேற்று “ஆதி புருஷ்” திரைப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 7:11 மணிக்கு வெளியாகவுள்ளது என்றும் ‘7000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக புத்திசாலித்தனமான பேய் இருந்தது’ என அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்திருந்தனர்.

இன்று இயக்குநர் ஓம் ராட் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஆதி புருஷ்’, ‘சாயிஃப் அலி கான்’, ‘பிரபாஸ்’, ‘டி சீரீஸ்’ என்ற ஹேஷ்டேக்களின் மூலம் “7000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக புத்திசாலித்தனமான பேய் இருந்தது! என கூறி சாயிஃப் அலி கான் அவர்கள் ‘லங்காதிபதியாக’ அதாவது ராவணனாக நடிக்கவுள்ளார்” என கூறி படக்குழுவினர்களை டேக் செய்துள்ளார்.

Most Popular

Recent Comments