2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் விஜய் இயக்கிய கரு படத்தின் மூலமாக அறிமுகமாகி மாரி 2, என்.ஜி.கே என பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
சாய் பல்லவி கோவையில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர், 2016ம் ஆண்டு ஜியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவ பல்கலைகழகத்தில் தன்னுடைய மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தேர்வு எழுத நேற்று வந்தார் நடிகை சாய் பல்லவி. அப்போது அங்குத் தேர்வு எழுத வந்த மற்றவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.
இதன் மூலம் சாய் பல்லவி திரைத்துறையிலிருந்து விலகி மருத்துவராகப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.