மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் , 2013ம் ஆண்டு “கீதாஞ்சலி” படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தமிழில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பிறகு ரஜினி முருகன், சர்க்கார், ரெமோ, பைரவா, சண்டக்கோழி 2, சாமி 2, நடிகையர் திலகம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இறுதியாகக் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த “பெண்குயின்” படம் அமேசான் பிரைமில் கடந்த மாதம் வெளியானது.
நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும், கேரள பாரம்பரிய உடை அணிந்து புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை நேற்று விமர்சையாக கொண்டாடி அந்தப் புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.